எக்கச்சக்க அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகமான டாடா Aeris
டாடா நிறுவனம் தனது நான்கு மீட்டருக்கும் குறைவான செடான் காரை புதுப்பித்துள்ளது. முன்னதாக டிகோர் ஃபேஸ்லிஃப்ட் என்று அறிமுகம் செய்யப்பட இருந்த காருக்குப் பதிலாக, Aeris பெயரில் புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டாடா Aeris கார் மாடல் ரூ. 5.29 லட்சம் என்ற (எக்ஸ்-ஷோரூம்) அறிமுக விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, Aeris காரில் டியாகோ காரில் உள்ள அதே முகப்பு விளக்கு அமைப்பு உள்ளது, இருப்பினும் பம்பரில் குறைவான கருப்பு நிற கிளாடிங் இடம்பெற்றுள்ளன. மற்ற அம்சங்களில் பிளாக்டு-அவுட் ORVM-கள், ORVM-களில் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள், 15-இன்ச் டயர்கள், டூயல்-டோன் அலாய் வீல்கள் உள்ளன.
இவற்றுடன் முன் வரிசை இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி மற்றும் இணைக்கப்பட்ட அமைப்பைக் கொண்டிருப்பது போல் தோன்றும் டெயில் கேட் உள்ளது; எனினும் அது உண்மையல்ல. டெயில் லைட் கிராஃபிக்ஸ் கூடுதல் கூறுகளுடன் சற்றே வேறுபடுகின்றன.
இந்திய சந்தையில் புதிய டாடா Aeris, டாண்டெலி டிரிஸில் (லாவெண்டர்), நைட்ரோ கிரிம்சன் (சிவப்பு), டூன் க்ளோ (மணல் நிறம்), டேடோனா கிரே, ப்யூர் கிரே மற்றும் பிரிஸ்டைன் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. புது Aeris மாடலின் கேபினில் கிரே இன்டீரியர் மற்றும் டூயல்-டோன் இருக்கைகள் உள்ளன.
ஸ்டீயரிங், டாஷ்போர்டு அமைப்பு, மற்றும் சென்டர் கன்சோல் வரை அனைத்தும் அசல் டியாகோ வடிவமைப்பைப் போலவே உள்ளன.
அதாவது, புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங், செக்மென்டட் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25-இன்ச் சென்டர் ஸ்கிரீன், இரட்டை அமைப்பு போல் தோற்றமளிக்கும் ஒற்றை வயர்லெஸ் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்கள், ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கான ரோட்டரி டிரைவ் செலக்டர், டாஷ் கேமராகவும் செயல்படும் 360° கேமரா, மற்றும் ஏசி வென்ட்கள் ஆகியவை இதில் அடங்கும்.
டாடா Aeris மாடலில் 85bhp பவர் மற்றும் 113Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஐ-சி.என்.ஜி. (டூயல்-சிலிண்டர் செட்டப்) 74.5bhp பவர், 96.5Nm டார்க் வெளிப்படுத்துகிறது.
இரண்டு மாடல்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. டாடா Aeris காாருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விநியோகம் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்குகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel