தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

போலி சான்றிதழ் வழங்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - மாணவர்கள் போராட்டம்!

இந்நிலையில் இவர் மருங்கிப்பட்டியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்தபோது அதே ஊரை சேர்ந்த அதே பள்ளியில் 3-ம் வகுப்பு வரை படித்திருந்த வீரன் (வயது 44) என்பவருக்கு 5-ம் வகுப்பு வரை படித்ததாக போலியாக சான்றிதழ் வழங்கியதாகவும், அந்த சான்றிதழை வைத்து வீரன் கீரனூர் மின்சார வாரிய அலுவலகத்தில் கடந்த 2020 முதல் 2025 வரை நிரந்தர கேங்மேன் வேலை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வீரன் மின்வாரிய அலுவலகத்திற்கு கொடுத்திருந்த படிப்பு சான்றிதழை அதிகாரிகள் சரிபார்த்த போது அது போலியான சான்றிதழ் என்று தெரிய வந்ததால் அவர் கடந்த 2025 நவம்பர் மாதம் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் போலியான படிப்பு சான்றிதழ் வழங்கிய தற்போது சின்னபாண்டுரார்பட்டி பள்ளியில் வேலை பார்க்கும் பெர்னெட் மேரி மீது மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர் போலியாக சான்றிதழ் வழங்கியதை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியையை மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பள்ளியில் படிக்கும் 22 பேரில் 20 மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து புத்தக பைகளுடன் பள்ளிக்கு முன்பாக பெற்றோர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் கனகராணி, வட்டார கல்வி அலுவலர் அங்கையர்கன்னி, மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel