தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - மாணவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பிய SMS

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னையில் இதனை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டம் இன்று தொடங்கப்படுவது குறித்து மாணவர்களின் பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு முதலமைச்சர் விஜய் பெயரில் குறுந்தகவல் நேற்று வந்தது.

அதில், 'அன்பார்ந்த பெற்றோருக்கு வணக்கம். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்து, சிறப்பாக கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான, சுவையான காலை உணவு 22-ந்தேதி முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

- பிரியமுடன், ஜோசப் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர்'. என்று இடம் பெற்றுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel