தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷன் அனுமதிக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. பின்னர், அமைச்சரவையில் இந்த அறிக்கையின் ஒரு பகுதி ஏற்கப்பட்டது. இந்த அறிக்கையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இரண்டு நீதிபகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் அறிக்கை தமிழக அரசால் ஏற்கப்பட்டதா? இல்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு சார்பு வழக்கறிஞர் அறிக்கையின் ஒரு பகுதி ஏற்கப்பட்டது எனத் தெரிவித்தார். அத்துடன் ஆணையை முழுயைமாக ஏற்றுக் கொள்வது என்பது மாநில அரசின் உரிமை என்றார்.
அதற்கு நீதிபதிகள் "இழப்பீட்டை 30 கோடி ரூபாய்க்கு அதிக வழங்கப்பட திட்டமுள்ளதா? அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமுள்ளதா? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தற்போதைய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால் இது குறித்து குறுக்கிட விரும்பவில்லை. வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel