10,000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனினை விரைவில் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், ரெட்மி நோட் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் சிலவற்றை சியோமி ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் 10,000mAh அளவில் பெரிய பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 1.5K AMOLED ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடல் வரவிருக்கும் ரெட்மி நோட் 17 வரிசையில் முதன்மையான மாடலாக இருக்கும். இதன் விலை பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் 10,000mAh பேட்டரி 'சிலிக்கான்-கார்பன்' பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்துடன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கும் திறன் கொண்டது.
இந்த ஸ்மார்ட்போன் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.83 இன்ச் AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மெல்லிய பெசல்களுடன் கூடிய இந்த CrystalRes AMOLED திரை, சியோமியின் பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம், மல்டிமீடியா மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு இந்த மாடல் மிகவும் ஏற்றதாக அமையும்.
ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 பிராசஸர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 12 ஜிபி வரை ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel