பீகார், ம.பி., குஜராத்தில் நாளை சட்டசபை இடைத்தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.
இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. நேற்று மாலையுடன் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்தது.
இந்நிலையில், பீகாரின் பங்கிபூர், குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் தாட்டியா உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாளை பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3-ம் தேதி எண்ணப்படும் என தெரிவித்துள்ளது.
மூன்று தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் இந்த இடைத்தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதும் தெரிய வரும்.
பீகாரின் பங்கிப்பூரில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.