ஓவியாவின் படம் ரிலீஸாக பிக் பாஸ் தடை!


Tags : Bigg Boss Tamil , Oviya , Bigg Boss , Vijay Tv , Kamal Hassan , Oviya Army, Oviya Movies, Oviya Next Movies, Oviya Pictures, Oviya Latest News, Oviya Next Films ,Oviya Bigg Boss fight, Oviya unseen pictures

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக ஓவியாவின் படம் ரிலீஸாக தாமதமாகிறதாம்.

தமிழ்த் திரையுலகால் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பாபுலர் ஆக, இப்போது தமிழ் சினிமாவே ஓவியாவுக்காக ஏங்கி நிற்கிறது.

ஓவியாவுக்கு ஏற்பட்டுள்ள கிரேஸின் விளைவால் ஓவியா துண்டு துக்கடா கேரக்டரில் நடித்த படங்கள், ஓவியா நடித்த படங்களின் டப்பிங் வடிவம் ஆகியவைகளுக்கு புது மவுசு வந்திருக்கிறது.

ஓவியா நடிப்பில் உருவான சீனி என்ற படம் பெயர் மாற்றப்பட்டு ஓவியாவ விட்டா யாரு? என்று வெளியாகவிருக்கிறது. அதேபோல் பிருத்விராஜ், ஓவியா நடித்த மலையாள படம் போலீஸ் ராஜ்ஜியமாக தமிழ் பேசவிருக்கிறது. இந்த படங்கள் எல்லாம் ஓவியாவுக்காக காத்திருக்கின்றன. ஓவியா புரமோஷனுக்கு வந்து படத்தைப் பற்றி பேசினால் தான் புரமோஷனுக்கு உதவும்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும்வரை ஓவியா இதுபோன்ற பேட்டிகள் கொடுக்க கூடாது. எனவே பிக் பாஸின் உத்தரவுக்காக காத்திருக்கின்றன ஓவியாவின் படங்கள்.

Leave A Comment