தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு

   மார்ச் 29, 2024 | 09:02 am     52 seconds ago

தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர்


கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம் என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் சுனிதா கெஜ்ரிவால்

   மார்ச் 29, 2024 | 08:07 am     55 minutes ago

கெஜ்ரிவாலுக்கு ஆசீர்வாதம் என்ற புதிய பிரசாரத்தை தொடங்கினார் சுனிதா கெஜ்ரிவால் புதுடெல்லி,டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் அதிகமாக துன்புறுத்தப்படுவதாகவும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத்


இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி

   மார்ச் 29, 2024 | 07:36 am     1 hour ago

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி புதுடெல்லி,உலக மக்களின் பாவங்களை போக்க 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இயேசு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தெழுந்தநாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் இறுதி வாரத்தின் தொடக்கமாக கடந்த 24-ந் தேதி


2-வது இடத்துக்கு முன்னேறும் பாஜக... கள நிலவர அறிக்கையால் நிர்வாகிகளை அலறவிடும் ஸ்டாலின்- எடப்பாடி

   மார்ச் 29, 2024 | 07:34 am     1 hour ago

2-வது இடத்துக்கு முன்னேறும் பாஜக... கள நிலவர அறிக்கையால் நிர்வாகிகளை அலறவிடும் ஸ்டாலின்- எடப்பாடி தேர்தல் களம் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் கள நிலவரங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.மூன்று அணிகள் களத்தில் மோதினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்ற கணக்கை தொடங்கி இருக்கும் பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் சில தொகுதிகளை கைப்பற்றி பாராளுமன்ற கணக்கையும் தொடங்கியாக வேண்டும்


ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்களா? காங்கிரஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

   மார்ச் 29, 2024 | 03:47 am     5 hours ago

ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்களா? காங்கிரஸ் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்! கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கள ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து பா.ஜனதாவை வீழ்த்தி அமோக வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்துள்ளது. அதே பாணியை பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க முடிவு செய்த காங்கிரஸ் கடந்த டிசம்பர் மாதம் கள ஆய்வு மேற்கொண்டது. இதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக பா.ஜனதாவுக்கு


கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்

   மார்ச் 29, 2024 | 02:41 am     6 hours ago

கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் திருப்பூர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்தபோது ரூ.1½


குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

   மார்ச் 28, 2024 | 02:57 pm     18 hours ago

குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு சென்னை, குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அதன்படி, முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்கள் குரூப்-1 பதவிகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அந்தவகையில் 2024-ம் ஆண்டுக்கான குரூப்-1 பதவிகளில்


பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

   மார்ச் 28, 2024 | 02:54 pm     18 hours ago

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர். பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.இந்நிலையில்,


அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம்

   மார்ச் 28, 2024 | 02:15 pm     18 hours ago

அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம் கோவை,தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பரிசீலனை செய்தனர். தமிழ்நாடு பா.ஜ.க