தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம்

   ஏப்ரல் 16, 2024 | 04:28 am     9 hours ago

தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்து செய்திகளை அச்சிட்டு


வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!

   ஏப்ரல் 15, 2024 | 10:54 am     1 day ago

வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் தனது வெற்றி


அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

   ஏப்ரல் 15, 2024 | 10:52 am     1 day ago

அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர்


ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

   ஏப்ரல் 14, 2024 | 05:26 pm     1 day ago

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி


தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்

   ஏப்ரல் 14, 2024 | 04:58 am     2 days ago

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேனி மக்களவைத்


3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு

   ஏப்ரல் 13, 2024 | 12:41 pm     3 days ago

3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை மந்திரி


தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., டி.டி.வி. தினகரன் வசமாகும் : அண்ணாமலை

   ஏப்ரல் 13, 2024 | 07:08 am     3 days ago

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.,  டி.டி.வி. தினகரன் வசமாகும் : அண்ணாமலை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனே போட்டியிடுகிறார். தேனி தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம்


திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

   ஏப்ரல் 13, 2024 | 02:37 am     3 days ago

திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் கோவை, பொள்ளாச்சி, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ. திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்.நாட்டுக்கும், மாநிலங்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ராகுல் வாக்குறுதிகளை


உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது ராகுல் காந்தி

   ஏப்ரல் 12, 2024 | 02:16 pm     3 days ago

உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது ராகுல் காந்தி நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண்


கோவை மோதல் விவகாரம்- அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

   ஏப்ரல் 12, 2024 | 07:55 am     4 days ago

கோவை மோதல் விவகாரம்- அண்ணாமலை மீது வழக்குப்பதிவு கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.இந்த விவகாரம் தொடர்பாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாக திமுகவினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3


எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ்

   ஏப்ரல் 12, 2024 | 07:54 am     4 days ago

எதிரிகள் மிரள்கின்றனர்... வெற்றி நம் வசமாகிறது: டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர்காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்; அடுத்த சில மணி நேரங்களில் பா.ம.க. மற்றும் கூட்டணிக்


பிரபல தமிழ் நடிகர் அருள்மணி காலமானார்

   ஏப்ரல் 12, 2024 | 12:44 am     4 days ago

பிரபல தமிழ் நடிகர் அருள்மணி காலமானார் பிரபல நடிகர் அருள்மணி மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்தார். அருள்மணி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், பிரசாரத்திற்கு இடையில் ஓய்வு எடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்துள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில்


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

   ஏப்ரல் 11, 2024 | 02:57 am     5 days ago

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு: ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக மானாமதுரை, கடலாடி, அருப்புக்கோட்டை


கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா!

   ஏப்ரல் 10, 2024 | 08:54 am     6 days ago

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா! கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 26-ந்தேதி மற்றும் மே 7-ந் தேதி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு புறநகர், கோலாா், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா, உடுப்பி-சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, மைசூரு, ஹாசன், மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு


மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா

   ஏப்ரல் 10, 2024 | 08:38 am     6 days ago

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் காங்கிரஸை விமர்சித்து வருகின்றன.


ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்பு

   ஏப்ரல் 10, 2024 | 04:20 am     6 days ago

ரம்ஜான் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் பங்கேற்பு ரம்ஜான் மாதம், முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன்படி சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஷவ்வால் மாத பிறை நேற்று தெரியவில்லை. எனவே நாளை (வியாழக்கிழமை) ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஈதுல் பித்ர் (ரம்ஜான் பண்டிகை)


தேனி: நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

   ஏப்ரல் 10, 2024 | 03:29 am     6 days ago

தேனி: நடைபயிற்சியின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.